பிரபல உடற்பயிற்சி நிபுணரும் (Fitness Influencer) யூடியூபருமான கௌரவ் தனேஜா (Flying Beast), தனது ‘பீஸ்ட் லைஃப்’ (Beast Life) பிராண்ட் மூலம் “உலகின் முதல் புரோட்டீன் காண்டம்” (Protein Condom) என்ற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்து சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். “பாதுகாப்பும் உண்டு, புரோட்டீனும் உண்டு” (Protection Bhi, Protein Bhi) என்ற வாசகத்துடன் இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த விளம்பரம், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகளிடையே குழப்பத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இது வைரலாகி, ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் மீம்களையும் குவித்து வருகிறது. பலரும் இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், சிலர் இதன் “புரோட்டீன் அளவு” எவ்வளவு இருக்கும் என்று கிண்டலாகக் கேட்டு வருகின்றனர். இது உண்மையிலேயே ஒரு புதிய தயாரிப்பா அல்லது பிராண்டின் விளம்பரத்திற்காகச் செய்யப்பட்ட ஒரு யுக்தியா எனத் தெரியாமல் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இருப்பினும், இந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்னதாக வந்திருப்பதால், இது ஒரு ‘ஏப்ரல் ஃபூல்’ (April Fools’) வேடிக்கையாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர். சந்தையில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தனது பிராண்டை டிரெண்ட் செய்வதற்காகவும் கௌரவ் தனேஜா இதுபோன்ற ஒரு வித்தியாசமான விளம்பரத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். உண்மை எதுவாக இருந்தாலும், தற்போது இணையம் முழுவதும் இந்த “புரோட்டீன் காண்டம்” குறித்த விவாதம் தான் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
