துருக்கியின் ஷான்லூர்பா மாகாணத்தில் உள்ள விரான்ஷெஹிர் பகுதியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் பாதுகாப்பின்றித் திறந்து வைக்கப்பட்டிருந்த மின்சாரப் பெட்டியை, சிறுவன் கவனக்குறைவாகத் தொட்டபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சிறுவன் மின்சாரப் பெட்டியைத் தொட்ட அடுத்த நொடியே, மின்சாரம் பாய்ந்த வேகத்தில் அவன் தூக்கி வீசப்பட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவனை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்தத் தாக்குதலில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள போதிலும், தற்போது அவன் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Şanlıurfa’nın Viranşehir ilçesinde sokakta oyun oynayan bir çocuk, açık bırakılan elektrik panosuna dokununca elinden yaralandı.
Olay anı güvenlik kamerasına yansıdı. pic.twitter.com/ey6LUITN72
— ENSONHABER (@ensonhaber) April 15, 2026
இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொது இடங்களில் மின்சாரப் பெட்டிகளைப் பாதுகாப்பின்றித் திறந்து வைத்திருந்த அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொது இடங்களில் இருக்கும் இத்தகைய ஆபத்தான மின் கட்டமைப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
