குடிகாரர்களின் ஓட்டு எனக்கு தேவையில்லை… அவர்கள் அதற்கு லாயக்கில்லை… சீமான் அதிரடி பேச்சு..!!!

By Soundarya on சித்திரை 17, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் மதுப் பழக்கத்தால் மக்கள் சீரழிந்து வருவதாகத் தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரங்களில் குற்றம்சாட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, “குடிப்பவர்களைப் பெருக்கி நாட்டைச் சீரழிப்பவர்களுக்கு மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சுமார் இரண்டரை கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதால், அவர்களின் வாக்குகளை இழக்க விரும்பாமல் எந்த அரசியல் கட்சியும் டாஸ்மாக் குறித்துப் பேசுவதில்லை என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

மதுப் போதையில் இருப்பவர்களால் ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், தனக்கு மது அருந்துபவர்களின் வாக்குகள் தேவையில்லை என்றும், விழிப்புணர்வு பெற்ற நல்ல குடிமக்களின் வாக்குகள் மட்டுமே போதும் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதை விட மதுக்கடைகளைப் பாதுகாப்பதிலேயே அரசு அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிவித்துள்ள சீமானின் இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.