திமுக அரசுக்கு எதிராகத் தான் தவறாக எதுவும் பேசவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகளும், போதை கலாசாரமும் நிலவுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையிலேயே அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி செய்வார் என்றுதான் தான் கூறியதாகவும், ஆனால் தனது பேச்சைச் சிலர் திரித்து வெளியிட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். முதலில் திமுக அரசை விமர்சிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய பிரேமலதா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் “பல்டி” அடித்ததாகக் கருதப்படுகிறது.
