ஐயோ… என் தங்கைய கொன்னவன வெட்டிட்டேன்… கர்ப்பிணியைக் கொன்ற மைத்துனனை… 7 மாதம் காத்திருந்து… போட்டுத் தள்ளிய அண்ணன்… தெலுங்கானாவில் நடந்த கொடூரம்…!

By Swetha on புரட்டாதி 22, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்பவரை, வரதட்சணை கொடுமை மற்றும் தகராறு காரணமாக அவரது கணவர் ஹரிபிரசாத் கடந்த 2025 மார்ச் மாதம் கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாகக் கொலை செய்தார். கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஹரிபிரசாத், சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து நிஜாமாபாத் பகுதியில் தங்கியிருந்தார். தங்கையைக் கொன்றவன் சுதந்திரமாக உலவுவதைக் கண்டு ஆத்திரமடைந்த வைஷ்ணவியின் அண்ணன் சந்தோஷ், அவருக்குப் பழிவாங்கச் சமயம் பார்த்து காத்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 17 அன்று நிஜாமாபாத் கிரீன் கிராஸ் சாலையில் ஹரிபிரசாத் நின்று கொண்டிருந்ததைச் சந்தோஷ் கவனித்தார். உடனடியாகத் தனது காரில் இருந்த கத்தியை எடுத்து ஹரிபிரசாத்தைக் குத்திக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்ற சந்தோஷ், “என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்; பெண்கள் மீது கை வைக்க இனி அனைவரும் பயப்பட வேண்டும். எனது இரு குழந்தைகளுக்காக வருந்துகிறேன், எனக்குக் குறைந்த தண்டனை கிடைக்கப் பொதுமக்கள் உதவ வேண்டும்” என உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

   

வீடியோ வெளியிட்ட இரு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 19 அன்று சந்தோஷ் நிஜாமாபாத் காவல் நிலையத்தில் சரணடைந்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், “தங்கையைக் கொன்றவன் இறந்ததில் மகிழ்ச்சி என்றாலும், கணவர் இல்லாமல் இரு குழந்தைகளுடன் எப்படி வாழ்வது என்று தெரியவில்லை” எனச் சந்தோஷின் மனைவி கவலையுடன் தெரிவித்துள்ளார். 7 மாதங்கள் காத்திருந்து தங்கைக்காக அண்ணன் செய்த இந்தப் பழிவாங்கல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.