“மகன்களுக்கே முக்கியத்துவம்… மகள்களுக்கு இல்லையா…?” தாயின் பாகுபாட்டால் மனம் உடைந்த சிறுமி…! இணையத்தில் வைரலாகும் பதிவு…!!

By Devi Ramu on புரட்டாதி 22, 2026

Spread the love

“ஆண் பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள், குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள்; பெண் பிள்ளைகளால் முடியாது” எனச் சொந்தத் தாயே பாகுபாடு காட்டும் சிந்தனை குறித்து எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

அப்பதிவில், பெண் குழந்தைகள் முதலில் தங்களுடனும், பின்னர் குடும்பம், உறவினர்கள் மற்றும் சமூகத்துடனும் போராட வேண்டியிருப்பதாகவும், இந்த அனைத்துப் போராட்டங்களையும் கடந்து இறுதியில் ஒரு துணிச்சலான, பயமற்ற பெண் உருவாகிறாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

மேலும், “மக்கள் உங்களைப் பயமுறுத்துவார்கள், உங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து உழையுங்கள். உங்கள் போராட்டத்தை நீங்களே போராடி வென்றீர்கள் என்று உங்களுக்குள் பெருமைப்படும் ஒரு நாள் நிச்சயம் வரும்” எனப் பெண்களுக்கு நம்பிக்கையளிக்கும் கருத்துகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த உருக்கமான பதிவிற்குப் பலரும் தங்களது ஆதரவுகளையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.