அடப்பாவிங்களா… மனுஷனாடா நீங்களாம்?… எரியும் பிணத்தின் மீது இறைச்சி சமைக்க… பாத்திரம் வைத்த 3 பேர்… உ.பி.யில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடுமை…!

By Swetha on புரட்டாதி 22, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம், நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, கிராமத்திற்கு வெளியே உள்ள சுடுகாட்டில் குடும்பத்தினர் இறுதிச்சடங்கை முடித்து சிதைக்கு தீ வைத்தனர். சடங்குகள் முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் சுடுகாட்டுக்குச் சென்ற வீர்பால், எரிந்துகொண்டிருந்த தந்தையின் சிதை தீயில் மூன்று பேர் பாத்திரம் வைத்து இறைச்சி சமைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த சுரேந்திரா என்பவரைக் கைது செய்தனர்; அவருடன் இருந்த மற்ற இருவர் தப்பிச் சென்றனர். விசாரணையில், மூவரும் மது அருந்திய மயக்கத்தில் இருந்ததாகவும், சிதையின் தீயைக் கண்டு அதில் இறைச்சி சமைக்க முடிவு செய்ததாகவும் சுரேந்திரா தெரிவித்துள்ளார். அதேவேளையில், இதில் ஏதேனும் மாந்திரீக பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், உண்மையைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

சுடுகாட்டில் நடந்த இந்த அநாகரிகமான சம்பவம் உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடமும், உள்ளூர் மக்களிடையேயும் பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பி ஓடிய இருவரைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சட்டரீதியான முழு விசாரணைக்கு பிறகே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மையும் வெளிவரும்.