‘கலைஞர் 100’ விழா தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார். அதே போல கமல், சூர்யா, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதே போல, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான், டி.ராஜேந்திரன், ஷங்கர், ஆந்திர அமைச்சர் மீனாவும் கலந்து கொண்டார். ஏற்கெனவே இந்த விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சென்னையே மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை பெய்து , கடுமையான வெள்ளதால் பாதிக்கப்பட்டது. இதனால் கலைஞர் 100 விழா’ ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜனவரி 6 ஆம் தேதி நேற்று இந்த விழா நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் முன்னணி திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட போதும் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
????
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 6, 2024
இவர்கள் இருவரும் தற்பொழுது தங்களது படத்தின் ஷூட்டிங் தொடர்பாக வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில் இந்த விழாவில் பெருமளவு கூட்டம் கலந்து கொள்ளவில்லை. இதனால் இருக்கைகள் காலியாகி வெறிசோடி காணப்பட்டது. ‘விஜய், அஜித் வராததின் காரணமாகத்தான் கூட்டம் வரவில்லை என்றும், நடிகர் ரஜினி வந்துமே இப்படி ஒரு நிலையா..?’ என்றும் நெட்டிசன்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
