விவாகரத்துக்கு பிறகு.. ‘கலைஞர் 100’ விழாவில் பேசிய முன்னாள் மருமகன் தனுஷ்… ரஜினி கொடுத்த ரியாக்சன் என்ன தெரியுமா..?

By Begam

Published on:

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நேற்று , சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் , தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

kalignar1

இவர்கள் மட்டுமின்றி முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் , சூர்யா , தனுஷ், கார்த்திக், நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினரும் கலந்துகொண்டனர். இந்த விழாவானது கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியே நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜாம் புயலால்  ஏற்பட்ட கனமழையால் தள்ளிவைக்கப்பட்டது.

   

இந்நிலையில் ‘கலைஞர் 100 விழா’ நேற்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பொது மக்கள் பார்ப்பதற்கு வசதியாக இந்த நிகழ்ச்சியை எல்இடி திரையிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

kalignar3

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், ‘கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. எந்திரன் படத்தை அவருடன் சேர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தை ரசித்து ரசித்து பார்த்தார் அதைப்பார்த்து நானே வியந்துவிட்டேன்’ என்று கலைஞரை புகழ்ந்து பேசினார். இதனை நடிகர் தனுஷின் முன்னாள் மாமனாரான நடிகர் ரஜினி ரசித்து பார்த்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…