டேய்… என்ன பண்ற தம்பி… நிப்பாட்டு… ஓட்டுநரே இல்லாம ஓடிய… டிரைவர்லெஸ் கார் நேரா போய்… போலீஸ் வேன் மேலேயே பாய்ந்து சிதறிய ஷாக்கிங் காட்சி…!!

Spread the love

பாகிஸ்தானில் தானியங்கி காரை சோதிக்கும் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. முகமது ஆலிஜா என்ற பாகிஸ்தான் பத்திரிகையாளர், ஓட்டுநர் இல்லாமல் தாமாகவே இயங்கும் ஒரு காரின் முன் இருக்கையில் அமர்ந்தபடி அதைப் பெருமையுடன் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவில் “பாகிஸ்தானில் திறமைக்கு பஞ்சமில்லை” என்று அவர் கூறிக் கொண்டிருந்த சில நொடிகளிலேயே, அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காவல் துறை வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துக்கு இணையச் சேவையில் ஏற்பட்ட தடையே முக்கியக் காரணம் என்றும், அதனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கார் கட்டுப்பாட்டை இழந்தது என்றும் ஆலிஜா விளக்கமளித்துள்ளார். எஹ்சான் ஜாபர் என்ற தொழில்நுட்ப ஆர்வலர் உருவாக்கிய இந்த காரின் விபத்து வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் கேலிக்கு உள்ளானது. குறிப்பாக, இந்திய நடிகர் ரன்வீர் ஷோரே இந்த வீடியோவைப் பகிர்ந்து, டெஸ்லா காருக்கு பாகிஸ்தானின் கண்டுபிடிப்பு “தி மஸ்லா” என்று நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.

காவல் துறை வாகனத்தின் மீது கார் மோதியபோதும், சம்பந்தப்பட்டவர்கள் மீது இஸ்லாமாபாத் போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த காவல்துறை அதிகாரி டாக்டர் அயாஸ் உசேன், புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கும்போது இதுபோன்ற கோளாறுகளும், மனிதத் தவறுகளும் நடப்பது சகஜம் என்று கூறினார். மேலும், இந்த இளைஞர்களைத் தாங்கள் ஊக்குவிப்பதாகவும், இவர்கள் “பாகிஸ்தானின் எதிர்காலம்” என்றும் பாராட்டி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

Swetha

Recent Posts

குஷியோ குஷி… மீன்பிடி தடை கால தொகை இனி ரூ.20,000…. தமிழக அரசு அறிவிப்பு….!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன…

25 minutes ago

பாஜக-வுக்கு அடித்த லாட்டரி…. விஜய் எடுத்த அந்த ஒரு முடிவால் மொத்தமாக மாறப்போகும் தேர்தல் களம்… அமித்ஷா போடும் மாஸ்டர் பிளான்….!

தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்து மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ள விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்த இந்தியப்…

30 minutes ago

“தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரத்தில் ரெட் அலெர்ட்”…. TRB ராஜா வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்…. அதிர்ச்சி தரும் GST புள்ளிவிவரம்…!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதாக வெளியான புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிநிலை…

38 minutes ago

எக்ஸ்பிரஸில் சிக்கிய சிவப்பு சூட்கேஸ்… வசமாக சிக்கிய தம்பதி…. சென்னை பெண் கொடூரக் கொலை வழக்கின் திடுக்கிடும் பின்னணி…!!

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்லி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா கேன்ட் நிலையத்தில் வைத்துப் பொதுப்…

40 minutes ago

“என் தலையிலேயே கை வைக்க பாக்கிறாரா?”…. தினகரன் மீது பாயும் இபிஎஸ்…. அதிமுகவில் வெடித்த அடுத்த பூகம்பம்….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.…

42 minutes ago

“வீடியோ காலில் ஆடையில்லாமல் வாங்க…” காதல் ஆசை வலையில் விழுந்த வாலிபர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்… போலீஸ் .அதிரடி..!!

பரேலியைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருக்கு அம்ரிதா கவுர் (24) என்ற பெண் தவறான அழைப்பு மூலம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில்…

47 minutes ago