“இளைஞர்களே ஏமாந்துடாதீங்க.. இன்ஸ்டா அரசியல் வேற.. நிஜ வாழ்க்கை வேற!”.. இளைஞர்களுக்கு வானதி சீனிவாசன் கொடுத்த ‘டோஸ்’… கோவையில் பரபரப்பு…!!!

Spread the love

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், சிவானந்த காலனியில் உள்ள காமராஜர் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் மக்கள், குறிப்பாகப் பெண்களும் இளைஞர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்து கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிப் போராடுபவர்களுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் முறைகேடுகள் குறித்துப் பேசிய அவர், கோவை தெற்குத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றும் வகையில் அராஜகங்கள் நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டினார். திமுகவினர் வாக்காளர்களுக்கு கோல்டு காயின் மற்றும் சில்வர் காயின்களை வழங்கி ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவதாகப் புகார் தெரிவித்த அவர், மாநகராட்சித் தேர்தலைப் போலவே இப்போதும் நாடகம் ஆடுவதாகச் சாடினார். அண்ணாமலை மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் ‘டிரஸ் கோடு’ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆடையில் எதுவும் இல்லை என்றும், இளைஞர் சக்தியால் எதையும் சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய வானதி சீனிவாசன், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இருப்பது மட்டுமே அரசியல் ஆகாது என்று எச்சரித்தார். “ஸ்மார்ட் போனைத் தாண்டி உங்களுக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறது; உங்கள் குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் உங்கள் மீது உள்ளன” என்று கூறிய அவர், இரண்டு மணி நேரம் பார்க்கும் சினிமா வேறு, நிஜ வாழ்க்கைக்கான அரசியல் வேறு என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்றார். சமூக ஊடகங்களை ஒரு கருவியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், வாக்களிக்கும்போது புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுச் சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Muthu Mani

Recent Posts

ஐயோ கொடுமை..! மீதி கேட்டதற்கு இப்படியா?… சில்லறை தகராறு… பேருந்தில் வெடித்த வாக்குவாதம்…. பெண் நடத்துனருக்கு நேர்ந்த கொடூரம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டம் மனுகுரு பகுதியைச் சேர்ந்த மௌனிகா என்பவர், தனது மகனுடன் பத்ராசலம் நோக்கிச் சென்ற…

2 minutes ago

“டீ-ல ஏன் சர்க்கரை இல்ல?”… இப்படி பண்ணுவாங்களா?.. கடைக்காரர் சொன்ன ஒரு வார்த்தை… கைகலப்பில் முடிந்த விபரீதம்… அரங்கேறிய பகீர் சம்பவம்…!!

மும்பையின் ஜோகேஸ்வரி மேற்கு, ஓஷிவாரா ஆனந்த் நகர் பகுதியில் அமைந்திருக்கும் சுன்னி மசூதி அருகே சிறிய தேநீர்க் கடை ஒன்று…

11 minutes ago

இப்படியொரு விபரீதமா?… ஒரு சிறிய அலட்சியம்… அதிவேகத்தில் வந்த மரணம்… இரண்டு உயிர்கள் பலி… 14 வயது சிறுவனால் நேர்ந்த விபரீதம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 14 வயது சிறுவன் தனது தந்தைக்கு தெரியாமல் வீட்டிலிருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு நண்பருடன்…

19 minutes ago

ஷாக்..! சினிமா பாணியில் சேஸிங்… வேனுக்குள் இருந்த ரகசிய அறை… சிக்கிய ரூ. 4 கோடி ஹவாலா பணம்… வருமான வரித்துறை அதிரடி என்ட்ரி…!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்-3 சாரோடா பகுதியில், பிக்கப் வாகனம் ஒன்றிலிருந்து கணக்கில் வராத நான்கு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை…

37 minutes ago

அடபாவேமே..! ரூம் வாசலில் நடந்த அதிர்ச்சி… சுருண்டு விழுந்த புதுமணப் பெண்… அடுத்த 5 வினாடிகளில் நடந்த பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் CCTV…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன முஸ்கான் என்ற இளம் பெண் மர்மமான முறையில்…

48 minutes ago

அடகடவுளே..! “என்னை கட்டிக்கோ!”… லவ் டார்ச்சர்… போலீஸ் புகார்… இறுதியில் மரணம்… ஐடி வட்டாரத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.…

59 minutes ago