தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டம் மனுகுரு பகுதியைச் சேர்ந்த மௌனிகா என்பவர், தனது மகனுடன் பத்ராசலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது மகனுக்கான பயணச்சீட்டு பெற அவர் 100 ரூபாய் நோட்டை வழங்கிய நிலையில், நடத்துனர் பிரவல்லிகா 10 ரூபாய்க்கான சீட்டை வழங்கிவிட்டு, மீதித் தொகையை உடனடியாகக் கொடுக்காமல் சீட்டின் பின்புறம் எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மௌனிகா, உடனடியாக மீதிப் பணத்தைத் தரக்கோரி நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எதிர்பாராதவிதமாக அவரை ஓடும் பேருந்தின் வாசலிலிருந்து கீழே தள்ளிவிட்டார்.
கீழே விழுந்த பெண் நடத்துனர் பிரவல்லிகா பேருந்தின் பின்பக்க சக்கரங்களில் சிக்கியதால், அவரது இரண்டு கால்களிலும் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்குப் போராடினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகளும் பொதுமக்களும் உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பேருந்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடத்துனரைத் தாக்கிப் படுகாயம் ஏற்படுத்திய மௌனிகாவைக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில்…
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், சடலவாடா கிராமத்தில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி கொடூரமாகக் கடத்தப்பட்டு…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், மாணவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாதத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சதுர்தாம் கோயிலில், பட்டப்பகலில் நூதனமான திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.…
மும்பையின் ஜோகேஸ்வரி மேற்கு, ஓஷிவாரா ஆனந்த் நகர் பகுதியில் அமைந்திருக்கும் சுன்னி மசூதி அருகே சிறிய தேநீர்க் கடை ஒன்று…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 14 வயது சிறுவன் தனது தந்தைக்கு தெரியாமல் வீட்டிலிருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு நண்பருடன்…