இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை விட்டுப் பிரியாமல் நான்கு நாட்களாகக் காவல் காத்த நாய் ஒன்றின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாயமான விக்சித் ராணா மற்றும் பியூஷ் ஆகிய இரு இளைஞர்களைத் தேடிச் சென்ற மீட்புக் குழுவினர், உறைபனியில் பியூஷின் உடல் கிடந்த இடத்தைக் கண்டறிந்தனர். அங்கு உணவு மற்றும் தண்ணீர் ஏதுமின்றி, சுற்றிலும் வீசிய கடும் பனிப்புயலையும் பொருட்படுத்தாமல் அவரது வளர்ப்பு நாய் அங்கேயே அமர்ந்து விசுவாசத்துடன் காவல் காத்து வந்துள்ளது.
மீட்புப் படையினர் உடலை எடுக்க முயன்றபோது, அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் எனக் கருதிய அந்த பிட்புல் நாய் அவர்களை ஆக்ரோஷமாகத் தடுத்தது. பின்னர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த நாய் சமாதானமடைந்து வழிவிட்ட பின்னரே சடலங்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க முடிந்தது. காட்டு விலங்குகளிடமிருந்து தனது எஜமானரின் உடலைப் பாதுகாத்து நின்ற அந்த நாயின் அபாரமான பாசமும், விசுவாசமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் கலங்கச் செய்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…