என்னது பிச்சைக்காசா..? ஆயிரம் ரூபாய்க்கு நடிக்க வந்தவர் நீங்க… குஷ்பூவை கிழித்தெடுத்த திமுக அமைச்சர்..!!

By Soundarya on தை 9, 2026

Spread the love
தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ உள்ளிட்ட நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ரூ. 1,000 தொகையை, பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு ‘பிச்சைக்காசு’ என விமர்சித்ததாகத் தகவல் வெளியானது. இது திமுகவினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், குஷ்புவின் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “ஆரம்ப காலத்தில் வெறும் ஆயிரம் ரூபாய்க்காக நடிக்கத் தொடங்கிய குஷ்பு, இன்று பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். அப்படிப்பட்டவர் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை இழிவாகப் பேசுவது முறையல்ல” என்று சாடினார்.