அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு, பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளது என்றும் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரத்தை இப்போது கூற முடியாது என்றும், அது குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தருவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
