மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், 21 வயது மாற்றுத்திறனாளி இளம்பெண் திக்ஷா தனது கையில் உருக்கமான கடிதத்தை எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, திக்ஷா தனது கையில் “என்னை மன்னித்து விடுங்கள்… ஐ லவ் யூ அம்மா, அப்பா” என்று எழுதி வைத்துள்ளார். தனது பெற்றோரிடம் மன்னிப்புக் கோரி அவர் எழுதிய இந்த வாசகம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. தங்களின் எதிர்காலத் தூணாகத் திகழ்ந்த மகள், திடீரென இத்தகைய விபரீத முடிவை எடுத்ததைக் கண்டு அவரது பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட திக்ஷாவின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான துல்லியமான காரணம் என்ன? யாரேனும் அவருக்கு அழுத்தம் கொடுத்தார்களா? என்பது குறித்து நாசிக் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
