வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இனி மொபைல் போன் மட்டுமின்றி, வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) மூலமாகவும் நேரடியாக ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாட்ஸ்அப் வெப் மூலம் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 32 நபர்களுடன் குழு அழைப்பில் இணைந்து பேச முடியும். இந்த வசதியைப் பயன்படுத்த உங்கள் கணினியில் வாட்ஸ்அப் செயலியைத் தனியாக இன்ஸ்டால் (Install) செய்ய வேண்டிய அவசியமில்லை. கூகுள் குரோம் அல்லது எட்ஜ் போன்ற வெப் பிரவுசர்களிலேயே (Web Browser) நேரடியாகப் பயன்படுத்தலாம்.
இந்த புதிய அப்டேட் இன்னும் ஓரிரு வாரங்களில் உலகளாவிய அளவில் அனைத்துப் பயனர்களுக்கும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கணினியில் வீடியோ கால் செய்ய வேண்டுமெனில் டெஸ்க்டாப் செயலியை (Desktop App) மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. இனி அந்தச் சிரமம் இன்றி பிரவுசர் மூலமே எளிதாகத் தொடர்புகொள்ளலாம்.
