விஜய் யாருக்கும் அடிபணிய மாட்டார்…!! அவங்களே எங்க பக்கம் தான்…! ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு…!!

By Devi Ramu on தை 21, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, 2026 சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சி மகத்தான வெற்றி பெறும் எனச் செய்தியாளர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்தார். திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற பிரதான கட்சிகளின் குடும்பங்களிலேயே தவெக ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக தலைவர் விஜய் யாருக்கும் அடிபணிய மாட்டார் என்றும், விரைவில் மாநிலம் தழுவிய அளவில் அவரது தீவிரப் பிரச்சாரப் பயணம் தொடங்கும் என்றும் அவர் உறுதியாக  கூறினார்.

மற்ற கட்சிகளின் கூட்டணிகள் மக்களைச் சாராமல் இருப்பதாகவும், தவெக மட்டுமே மக்களோடு இணைந்து இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். சிபிஐ விசாரணை மற்றும் ‘ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கை விவகாரங்களில் சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், உண்மை விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகாலத் தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தவெகவின் தேர்தல் அறிக்கை அமையும் என்றும், நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே விஜய் அறிவிப்பார் என்றும் ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்.