சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலரையும் தங்களது பள்ளிப் பருவ நினைவுகளுக்குக் கூட்டிச் சென்றுள்ளது. அந்த வீடியோவில், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாத ஒரு சிறுவன், தரையில் உருண்டு புரண்டும், தனது தாயின் கால்களைக் கட்டிக்கொண்டு கெஞ்சியும் எப்படியாவது பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கத் தீவிரமாகப் போராடுகிறான். ஆனால், அவனது எந்த நாடகத்திற்கும் இடங்கொடுக்காத அந்தத் தாய், பிடிவாதமாக அவனை இழுத்துச் சென்று, இறுதியில் கைகளில் தூக்கியபடி வகுப்பறையில் கொண்டு போய் விடுகிறார்.
<
माँ चाहें खुद अनपढ़ हो लेकिन बच्चों को हमेंशा पढ़ाना चाहती है। pic.twitter.com/jyMiq8PP87
— 𝗠𝗮𝗿𝗶𝘆𝗮𝗺_𝗠𝗕𝗗 (@Mariyam_MBD) January 19, 2026
/div>
இந்தக் காட்சிகள் பகிரப்பட்டவுடன், நெட்டிசன்கள் பலரும் தங்களது பால்ய கால அனுபவங்களை நகைச்சுவையுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பயனர், “நான் பள்ளிக்கு வராமல் அடம்பிடித்தபோது, என்னை இழுத்து வர பள்ளியிலிருந்து நான்கு பலமான மாணவர்களை ஆசிரியர் அனுப்பியது இன்றும் நினைவிருக்கிறது; சில நேரங்களில் படுக்கையோடு சேர்த்து என்னைத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “அன்று அந்தத் தாயின் கண்டிப்பு வேதனையாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் அதன் பின்னாலிருந்த அன்பும் அக்கறையும்தான் நம் எதிர்காலத்தை உருவாக்கியது என்பதை இன்று உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
