இயக்குனர்களுக்கு நடிகர்களும், தயாரிப்பாளர்களும் பாரின் கார் பரிசளிப்பது என்பது தற்போது வழக்கமாகி விட்டது. படம் வெற்றி அடைந்தவுடன் தங்களது மகிழ்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது வரை விலையுயர்ந்த கார்களை பரிசாக பெட்ரா இயக்குனர்களை பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்.
1.லோகேஷ் கனகராஜ்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் ஒரு மாஸ் ரீ என்ட்ரி திரைப்படம் தான் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தாறுமாறான வெற்றியை பெற்றது. இதைக் கொண்டாட நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 80 லட்சம் மதிப்புள்ள ஃபாரின் கார் ஒன்றை பரிசளித்தார்.
2.ஸ்ரீகாந்த் ஒடேலா:
தெலுங்கில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தசரா. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்ததோடு பிளாக்பஸ்டர் வெற்றியும் அடைந்தது. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கினார். தசரா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார்.
3.மாரி செல்வராஜ்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படம் மாமன்னன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் மாரி செல்வராஜுக்கு பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4.நெல்சன்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றி பெற்று தற்பொழுது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சனுக்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசளிக்க தயாரிப்பு நிறுவனம் யோசித்துக் கொண்டிருப்பதாக இணையத்தில் பரவலாக கூறப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…