Connect with us

CINEMA

“கில்லி” திரைப்படத்திற்கும் “ஒக்கடு” திரைப்படத்திற்கும் இவ்வளவு வேறுபாடு இருக்குதா? என்ன இப்படி எல்லாம் சீன்ஸ் வச்சிருக்காங்க!

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய், திரிஷா நடிப்பில் சக்கை போடு போட்ட “கில்லி” திரைப்படம் கடந்த 20 ஆம் தேதி மீண்டும் தமிழக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்து 20 வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் இத்திரைப்படம் ரீரிலிஸிலும் எதிர்பாராத அளவு வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலேயே 3 கோடிக்கும் மேல் வசூல் ஆனதாக கூறப்படுகிறது.

“கில்லி” திரைப்படம் 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த  “ஒக்கடு” என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்திருந்தார். பூமிகா கதாநாயகியாக நடித்திருந்தார். “கில்லி” திரைப்படத்தை போலவே “ஒக்கடு” திரைப்படத்திலும் பிரகாஷ் ராஜ்தான் வில்லனாக நடித்திருந்தார்.

   

எனினும் “கில்லி” திரைப்படத்தின் இயக்குனரான தரணி, “ஒக்கடு” திரைப்படத்தை அப்படியே ரீமேக் செய்யவில்லை. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் பல காட்சிகளை மாற்றியிருக்கிறார்.

உதாரணத்திற்கு தெலுங்கில் “ஒக்கடு” திரைப்படத்தில் மகேஷ் பாபுவின் நண்பர்கள் கதாபாத்திரத்திரங்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது. ஆனால் “கில்லி” திரைப்படத்தில் விஜய்யின் நண்பர்கள் கதாபாத்திரத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் இருக்கும்.

“கில்லி” திரைப்படத்தில் தாமு ஏற்று நடித்திருந்த ஓட்டேரி நரி என்ற நகைச்சுவை கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம். ஆனால் “ஒக்கடு” திரைப்படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரமே கிடையாது.

மேலும் “கில்லி” திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜய், திரிஷாவை பிரகாஷ் ராஜ்ஜின் ஊரில் இருந்து ஜீப்பில் அழைத்துச் செல்லும்போது பிரகாஷ் ராஜ்ஜை சேற்றில் தள்ளிவிடுவார். சேற்றில் விழுந்த பிரகாஷ் ராஜ் உடனே குளித்துவிடுவார். ஆனால் “ஒக்கடு” திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் கதாநாயகியை திருமணம் செய்யும் வரை குளிக்கப்போவதில்லை என சபதம் எடுத்து பல காட்சிகளில் அந்த சேருடனையே வருவார்.

“கில்லி” திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ்ஜின் முத்துப்பாண்டி கதாபாத்திரம் திரிஷாவின் தனலட்சுமி கதாபாத்திரத்தை தீவிரமாக காதலிப்பது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால் “ஒக்கடு” திரைப்படத்தில் ஒருபடி மேலே போய் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு மார்பளவு சிலை கொண்ட ஒரு கோவிலை அமைத்து பிரகாஷ்ராஜ் வழிபட்டுக்கொண்டிருப்பார்.

அதே போல் “கில்லி” திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் கிளைமேக்ஸில்தான் விஜய்யை அடித்துப்போட்டு தனலட்சுமியை அழைத்து வருவார். ஆனால் “ஒக்கடு” திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பே பிரகாஷ்ராஜ் கதாநாயகியை ஹீரோவிடம் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து திருமணத்திற்கான ஏற்பாட்டை தயார் செய்வார். அதன் பிறகுதான் கிளைமேக்ஸில் மகேஷ் பாபுவுடன் கபடி கிரவுண்டில் சண்டை போடுவார்.

மேலும் “ஒக்கடு” கிளைமேக்ஸில் கதாநாயகியின் தந்தை பிரகாஷ்ராஜ்ஜை கத்தியை வைத்து குத்தி கொள்வது போல் காட்சி அமைந்திருக்கும். ஆனால் “கில்லி” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் விஜய், பிரகாஷ்ராஜை அடிக்க பிரகாஷ்ராஜ் மின்சார கம்பத்தில் மோதி ஷாக் அடித்து இறந்துவிடுவார். அதே போல் “கில்லி” திரைப்படத்தில் இடம்பெறும் பல காமெடி காட்சிகள் “ஒக்கடு” திரைப்படத்தில் கிடையாது. இவ்வாறு இயக்குனர் தரணி, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் “கில்லி” திரைப்படத்தில் பல காட்சிகளை மாற்றியிருக்கிறார்.

Continue Reading

More in CINEMA

To Top