ஆன்லைன் மூலம் எலி மருந்து ஆர்டர் செய்த பெண்ணின் தற்கொலை முயற்சியைத் தடுத்து, ஒரு டெலிவரி ஊழியர் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் 3 முதல் 4 எலி மருந்து பேஸ்ட்டுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இதைப் பார்த்த டெலிவரி ஊழியருக்கு, ஒரே நேரத்தில் இவ்வளவு மருந்துகள் எதற்கு என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற ஊழியர், அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளைக் கவனித்தபோது அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
#WATCH | சென்னையில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய டெலிவரி ஊழியர் #SunNews | #Chennai | #Online | #Delivery pic.twitter.com/Dtgh0y922E
— Sun News (@sunnewstamil) January 8, 2026
வழக்கம்போல் பொருளைக் கொடுத்துவிட்டுச் செல்லாமல், மனிதாபிமானத்துடன் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தற்கொலை முடிவைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஊழியரின் இந்த சமயோசித செயலால் ஒரு உயிர் காக்கப்பட்டது. தனது கடமையையும் தாண்டி, சமூகப் பொறுப்புடன் செயல்பட்ட அந்த டெலிவரி ஊழியரின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த ஊழியர் நிஜமான “ஹீரோ” எனப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
