கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விதுரா கிராமம் சுற்றுலா தளமாக திகழ்கிறது. அங்குள்ள விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் மற்றும் இளம் பெண் ஆகிய இருவரும் தனியாக அரை எடுத்து தங்கினர். இதனிடையே அவர்கள் தங்கி இருந்த அறை திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் பிணமாக கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இறந்து போன வாலிபர் மரை முட்டம் பகுதியை சேர்ந்த சுபின் (28), இளம் பெண் ஆரியங்கோடு பகுதியை சேர்ந்த மஞ்சு (31) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் காதலர்கள் என்பதும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து பழகி வந்ததும் தெரிய வந்துள்ளது. மறக்க முடியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
இவர்களுடைய தொடர்பு குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் வீட்டை விட்டு இருவரும் வெளியேறின. அவர்கள் மாயமானது குறித்து இருவரின் குடும்பத்தினரும் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை உன் தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரும் லாட்ஜில் பிணமாக கிடந்தனர். தங்கள் காதல் விவகாரம் குடும்பத்துக்கு தெரிய வந்ததால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் தற்கொலை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது m
