ஜெயலலிதாவை விமர்சித்தத்தால் அதிமுகவினர் என்னை கல்லால் அடித்தார்கள்… நடிகர் ரஜினிகாந்தின் பரபரப்பு பேச்சு..!!

By Soundarya on தை 9, 2026

Spread the love

நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவின் போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் ஆவேசமாகப் பேசியது குறித்தும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ள நினைவுகள் தற்போது மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன. அந்த விழாவில், ஜெயலலிதாவின் ஆட்சி முறை குறித்து ரஜினி விமர்சித்துப் பேசியது அப்போது பெரும் அரசியல் புயலை கிளப்பியது.

தன்னுடைய அந்தப் பேச்சால் அதிமுக தொண்டர்கள் கடும் கோபமடைந்ததாகவும், அதன் விளைவாகத் தான் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்ததாகவும் ரஜினி தெரிவித்துள்ளார். குறிப்பாக, தான் சென்ற இடங்களில் எல்லாம் தன்னை கல்லால் அடித்தும், கடுமையாகத் திட்டியும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பிற்காலத்தில் ஜெயலலிதாவுடன் தனக்கு நல்ல நட்பு ஏற்பட்டதாகவும், அவர் ஒரு தைரியமான பெண்மணி என்றும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ஒரு காலத்தில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தாலும், காலப்போக்கில் அந்த கசப்பான சம்பவங்கள் மறைந்து இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை உருவானது குறிப்பிடத்தக்கது.