சி.வி.சண்முகம் VS சிபிஎம் சண்முகம்… விஜய்க்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்… CM எடுக்கப்போகும் அதிரடி முடிவு.. பரபரப்பில் தமிழக அரசியல்..!!

By Soundarya on வைகாசி 20, 2026

Spread the love

தவெக தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்துக்கொண்டால், தங்களின் ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என சிபிஎம் (CPM) சண்முகம் தவெக தலைவர் விஜய்க்கு நிபந்தனை விதித்துள்ளார். சிபிஎம் தனது ஆதரவை விலக்கிக்கொண்டால், அதே கூட்டணியில் உள்ள சிபிஐ (CPI) மற்றும் விசிக (VCK) ஆகிய கட்சிகளும் இதே போன்ற முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் புதிய ஆட்சியைத் தக்கவைப்பதில் தவெகவுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த அரசியல் சூழ்நிலையால், சி.வி.சண்முகமா அல்லது சிபிஎம் சண்முகமா என்பதில் யாருடைய ஆதரவைத் தேர்ந்தெடுப்பது என்ற இக்கட்டான நிலையில் தவெக தலைவர் விஜய் உள்ளார். அதிமுகவைச் சேர்ப்பதா அல்லது இடதுசாரிகளின் ஆதரவைத் தக்கவைப்பதா என்ற இறுதி முடிவு விஜய் கையில் மட்டுமே உள்ளது. இவர்களில் யாருடன் இணைந்து விஜய் ஆட்சியை நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரவலாப் பேசப்படுகிறது.