மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு ஸ்மார்ட்போன் தவணைக்காக ஏற்பட்ட தகராறு, ஒரு குடும்பத்தையே பலிகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த 18 வயது இளைஞரான குணால், தான் வாங்கிய புதிய ஐபோனுக்கான தவணைத் தொகையை செலுத்துமாறு பெற்றோரான முரளிதர் மற்றும் சங்கீதாவிடம் கேட்டுள்ளார். குடும்பச் சூழ்நிலை காரணமாக அவர்கள் உடனே பணம் தர இயலாது எனத் தெரிவித்ததால், கடும் கோபமடைந்த குணால் வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள மலையுச்சிக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.
இதனையறிந்து பதறிப்போன பெற்றோர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து 250 அடி உயரமுள்ள செங்குத்தான மலையின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மகனை மீட்க விரைந்தனர். சுமார் மூன்று மணி நேரமாகத் தாய் சங்கீதா கண்ணீர்மல்க மகனின் கால்களில் விழுந்து கெஞ்சியும் அவன் சமாதானம் அடையவில்லை. நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த தந்தை முரளிதர், மெதுவாகச் சென்று மகனைப் பிடித்து இழுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக இருவருமே நிலைதடுமாறி அதலபாதாளத்தில் விழுந்தனர். கண்முன்னே கணவனும், மகனும் மலையிலிருந்து விழுவதைக் கண்டு நிலைகுலைந்த தாய் சங்கீதாவும் மறுகணமே அதே விளிம்பிலிருந்து குதித்துத் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தாயின் மீது மிகுந்த அன்புகொண்ட குணால், அவருடன் இருக்கும் பழைய பாசமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது. அதேவேளையில், தந்தை முரளிதருக்கு வேறொரு பெண்ணுடன் இருந்த தொடர்பும், அதை ஏற்க மறுத்த தாயின் நிலைப்பாடும் கூட இந்த இளைஞரின் விரக்திக்குக் காரணமாக இருக்கலாம் என்ற மற்றொரு தகவலும் கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், பிரச்சனைகளை விவேகத்துடன் கையாளாமல் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் ஒரு தவறான முடிவு, ஒரு முழு குடும்பத்தையும் எப்படி சுக்குநூறாக்கும் என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…