தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு, அரசு வழங்கவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக இருப்பதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வரும் 2026, ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசின் பொங்கல் பரிசு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் ரொக்கத் தொகை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், குடும்ப அட்டைதாரர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
