ஸ்டாலின் தலையில் பேரிடி… ஆட்சி அதிகாரத்தில் பங்கு… இதுவே காங்கிரசின் நிலைப்பாடு… மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதே சமயம் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. அதன்படி காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றது. தமிழகத்திற்கு ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் வரவுள்ளனர். அதற்கான கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கின்றது. இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

   

காங்கிரசை பலப்படுத்த ஆட்சி அதிகாரம் அவசியம் என்பதை காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு தலைவர் சேகரித்துள்ளார். எங்கள் குழுவின் தலைவர் அவர்தான். தமிழக காங்கிரசுக்கும் அந்த நிலைப்பாடு தான் உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணியில் உறுதியாக உள்ளோம். கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. மீதி வாக்குறுதிகளையும் எஞ்சிய காலத்தில் நிறைவேற்றி விடும் என்று செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.