இந்தியாவில் ரொம்ப மோசம்… பிச்சை எடுக்கும் கும்பலை தடுத்து நிறுத்துங்க… அமெரிக்க சுற்றுலா பயணி காட்டம்..!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளைப் பின்தொடர்ந்து பணம் கேட்கும் பிச்சை எடுக்கும் கும்பல்களின் செயல்பாடு குறித்து அமெரிக்கச் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நிறுத்தத்திலும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் திருநங்கைகள் எனப் பல்வேறு தரப்பினர் குழுக்களாகச் செயல்படுவதாகவும், வெளிநாட்டினரைக் கண்டால் கூடுதல் பணத்திற்காக விடாமல் பின்தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகையச் செயல்கள் ஒரு திட்டமிடப்பட்ட மோசடி வலையமைப்பு போலச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்துத் தனது கேலியையும் கவலையையும் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற மோசடி கும்பல்களை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அப்போதுதான் வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் நிம்மதியான பயணச் சூழல் அமையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.