திருமணமாகி வெறும் 18 நாட்களே ஆன நிலையில், இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணிற்குத் திருமணத்திற்கு முன்பிருந்தே ஒருவருடன் காதல் இருந்து வந்த நிலையில், இது குறித்து உறவினர்கள் கேட்டபோதெல்லாம் தங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை என்று கூறி அனைவரையும் அவர் நம்ப வைத்துள்ளார்.
சம்பவத்தன்று, வீட்டிற்குத் தேவையான எலுமிச்சை பழம் வாங்கி வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதன் பின்னரே, அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி தனது காதலனுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. செல்லும் போது சாதாரணமாகச் செல்லாமல், வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் அவர் திருடிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பிச் சென்ற பெண் போகிற போக்கில் தனது கணவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றுள்ளார். தன்னைத் தேட முயன்றால் ஆட்களை வைத்து முடித்துவிடுவேன் என அவர் மிரட்டியது அக்குடும்பத்தினரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…