தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள பிங்க்லாவ் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல பாரில், பில் தொகையைச் செலுத்தவில்லை என்பதற்காக 18 வயது இளம் பெண்ணிற்கு மொட்டை அடிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/RT_com/status/2094172359057891770
போலி அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பாருக்குள் நுழைந்த அந்தப் பெண், உணவுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மதுபானங்களை ஆர்டர் செய்து சுமார் 60,000 பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.7 லட்சம்) பில் நிலுவை வைத்துள்ளார். பணத்தைச் செலுத்தாமல் தப்ப முயன்றபோது அவரைப் பிடித்த பார் ஊழியர்கள், காவல்துறையிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக ‘முடி விற்பனை ஒப்பந்தம்’ என்ற பெயரில் அவரது முடியை ரூ.8,000 மதிப்பீடு செய்து, எலெக்ட்ரிக் ரேஸர் மூலம் முழுமையாக மொட்டை அடித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் கண்டன அலையை உருவாக்கியுள்ளது. அந்தப் பெண்ணைக் மிரட்டி, கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணை அவமானப்படுத்திய பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தாய்லாந்து சமூக மேம்பாட்டு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
