கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயது கூலி தொழிலாளி ஒருவரின் மனைவி இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இதனை அடுத்து அந்த தொழிலாளியின் மனைவி மீண்டும் கர்ப்பமாகிய நிலையில் அவருக்கு கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி அன்று அவர் தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை பேச்சு, மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளது. பால் கொடுத்ததால் தான் குழந்தை இறந்திருருக்கும் என்று கருதி அவர்கள் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் மனைவி குழந்தை பிறந்த சோகம் எதுவுமில்லாமல் மறுநாளே அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
இதை கவனித்த கணவர் மனைவி இல்லாத நேரத்தில் அவருடைய செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அவருடைய மனைவியும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் அதில் இருந்துள்ளது. மேலும் அந்த இளம் பெண்ணின் செல்போனுக்கு இறந்து போன குழந்தையின் புகைப்படத்தை மனைவி அனுப்பி இருந்ததை பார்த்ததும் அதிர்ந்து போய் உள்ளார். லெஸ்பியன் மோகத்தில் பச்ச குழந்தையை தன்னுடைய மனைவி கொடூரமாக கொன்று இருக்கிறாரோ? என்ற சந்தேகம் அவருக்கு எழுந்த நிலையில் போலீசில் புகார் அளி த்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணையில் லெஸ்பியன் மோகத்தால் பச்ச குழந்தையை கொடூரமாக கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். தொழிலாளியின் மனைவிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. கூடாத நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் பழக்கம் நாளடைவில் லெஸ்பியனாக மாற்றி உள்ளது. ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் உனக்கு ஆண் குழந்தை பிறந்ததால் என்னை மறந்துவிட்டாய் என்று கூறியதால் அவர் தன்னுடைய குழந்தையை கொன்றுள்ளார்.
