பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டாவது சீசன் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது.

#image_title
எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். தற்போது தான் போட்டி சூடுபிடித்துள்ளது. ஒருவரையொருவர் தாக்கி பேசியும், சண்டையிட்டும் வருகிறார்கள். இதனால் வார கடைசியில் VJS போட்டியாளர்களை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார்.

#image_title
கமல்ஹாசன் போல் பொறுமையாக பேசாமல் அதிரடியாக பேசி வருகிறார். கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து தர்ஷா குப்தா எலிமினேட் செய்யப்பட்டார். அதற்கு முன்பாக ரவீந்தர், அர்னவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். மீதமுள்ள உள்ள 15 போட்டியாளர்கள் அனல் பறக்க விளையாடி வருகின்றனர்.
#image_title
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ள நான்காவது போட்டியாளர் யார் என்பதை நெட்டிசன்கள் பக்காவாக கணித்து கூறி வரும் நிலையில், இந்த வாரம் மக்களின் வாக்குகள் அடிப்படையிலும், மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு அடிப்படையிலும் பவித்ரா அல்லது அன்ஷிதா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என கூறி வருகிறார்கள்.
