பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

#image_title
இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .

#image_title
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் முகுந்தின் மனைவியாக சாய் பல்லவி நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் தற்போது அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

#image_title
இந்நிலையில் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.16.5 கோடி வசூல் செய்த் நிலையில் 2 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 31 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை SK வின் எந்த படத்திற்கும் கிடைத்திராத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
