மன நிம்மதி என்பது அனைவருக்கும் கட்டாயம் தேவை. என்னதான் பணம் காசு ஆடம்பரமான வாழ்க்கை இருந்தாலும் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். குடிசை வீட்டில் இருந்தாலும் நிம்மதியாக ஒரு வேளை சாப்பிடுபவரும் இருக்க தான் செய்கிறார்கள். மன நிம்மதி அவரவர் மன நலனை பொறுத்தது. இருந்தாலும் பொதுவாக நிம்மதியே இல்லை என்று நினைப்பவர்கள் என்ன செய்யலாம் என்பதை இனி காண்போம்.

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது மனநிம்மதி என்பது வெளியிலிருந்து நமக்கு வரக்கூடியது அல்ல. நமக்கு நாம் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்திக் கொண்டு ஒரு தெளிவு இருந்தாலே மன நிம்மதி கிடைக்கும். அப்படி இல்லை என்றால் என்னதான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தாலும் லட்சம் லட்சமாக நாம் முன்னாடி பணம் இருந்தாலும் அது மன நிம்மதியை தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேவையில்லாத சிந்தனைகளை வளர்க்கக்கூடாது தேவையில்லாத ஆசைகளையும் வளர்க்கக்கூடாது. சிலர் தேவையில்லாமல் ஆசைப்பட்டு அதை வாங்க வேண்டும் என்பதிலேயே ஓடிக்கொண்டிருப்பார்கள். அந்த பொருள் நமக்கு பயன்படாமல் கூட இருக்கலாம். அந்த மாதிரி இல்லாமல் ஒரு திட்டமிடலோடு வாழ்க்கையை பயணிக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயம் உங்களில் கைக்கு மீறி நடக்கிறது மன நிம்மதி குலைகிறது என்றால் ஏதாவது உங்களுக்கு விருப்பமான விஷயங்களில் விளையாட்டுகளில் செயல்பாடுகளில் அல்லது ஆன்மீக முறைப்படி கடவுளை நோக்கி உங்களை சிந்தனையை செலுத்துங்கள். தியானம் செய்யுங்கள்.
அடுத்ததாக நாம் எடுத்த காரியம் எல்லாம் தடைபடுகிறது முயற்சி எல்லாம் தோல்வியடைகிறது நமக்கு வெற்றி என்பதை கிடைக்காதா என்பதில் மன நிம்மதியை சிலர் இழந்து இருப்பார்கள். எப்போதுமே எந்த ஒரு விஷயத்தையுமே பாஸிட்டிவா அணுகுவதற்கு முயற்சி செய்யுங்கள். தோல்வியே ஏற்பட்டாலும் என்னால் முடியும் என்னால் ஜெயிக்க முடியும் எனக்கான நேரம் வரும் என்று உங்களுக்குள்ளே நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும்போது அது நேர்மறை எண்ணங்களை உருவாக்கி உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும்.

மன நிம்மதியை இழந்து தவிப்பவர்கள் குழப்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள் அது அம்மா மனைவி நண்பர் சகோதர சகோதரி யாராக இருந்தாலும் மனம் விட்டு பேசுங்கள். ஒருவரிடம் நம் மனம் விட்டு பேசும்போது நம் மனது இலகுவாகும். இது போன்ற பல வழிகளில் நம் மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வதற்கு நம்மளால் முயற்சி செய்ய முடியும். மனம் நிம்மதி இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நினைவில் கொண்டு மனநலனிலும் அக்கறை செலுத்துங்கள்.
