இளையராஜா மாதிரி இல்லய்யா ரஹ்மான்… அதிருப்தியில் இருந்த பாரதிராஜாவுக்கு நம்பிக்கைக் கொடுத்த வைரமுத்து… அப்படி என்ன பண்ணார்?

By vinoth on கார்த்திகை 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார். 2000 களின் இறுதிவரை அவரது படங்கள் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

80 களில் பாரதிராஜா ஒரு ட்ரண்ட் செட்டராக இருந்த நிலையில் 90 களில் சில சறுக்கல்களை சந்தித்தார். 90 களின் தொடக்கத்தில் அவர் எடுத்த கேப்டன் மகன், நாடோடித்தென்றல் மற்றும் என் உயிர் தோழன் ஆகிய படங்கள் தோல்வி அடைய ஆரம்பித்தன. அதனால் அவர் இனிமேல் அவ்வளவுதான் என்றெல்லாம் பேச்சுகள் எழ ஆரம்பித்தன. அதுமட்டுமில்லாமல் அப்போதுதான் அவர் இளையராஜாவையும் பிரிந்தார்.

   

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் தேவேந்திரனுடன் சில படங்கள் இணைந்து பணியாற்றினார். அதன் பின்னர் கிழக்குச் சீமையிலே படத்துக்காக முதல் முறையாக ரஹ்மானோடு கூட்டணி அமைத்தார். அப்போது ரஹ்மானால் கிராமியப் படங்களுக்கு எல்லாம் இசையமைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

   

#image_title

 

ஆனால் அதையெல்லாம் அவர் முறியடித்தார். ஆனாலும் படம் உருவாக்கத்தின் போது பாரதிராஜா ரஹ்மான் மேல் கொஞ்சம் அதிருப்தியில்தான் இருந்தாராம். அதற்குக் காரணம் இளையராஜா போல வேகமாகப் பாடல்களைக் கொடுக்காமல் ரஹ்மான் நிதானமாக பாடல்கள் கொடுத்ததுதானாம். இளையராஜா என்றால் ஒரே நாளில் கூட பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டு கைக்கு வந்துவிடும்

ஆனால் ரஹ்மான் பாடலை மீண்டும் மீண்டும் திருத்தி செதுக்கி மெருகேற்றிக் கொடுக்கும் பாணியுடையவர். அதனால் கிழக்குச்சீமையிலே படத்தின் போது ரஹ்மான் மேல் அதிருப்தியுடன் இருந்துள்ளார் பாரதிராஜா. ஆனால் பாரதிராஜாவை சமாதானப்படுத்திய வைரமுத்து “அமைதியா இருங்க ரஹ்மானிடம் இருந்து இதுவரை நீங்கள் பெறாத ஒன்று கிடைக்கும்” என நம்பிக்கையாகப் பேசினாராம். அவரின் நம்பிக்கையைப் பொய்க்கவிடவில்லை ரஹ்மான் என்பது வரலாறு.