‘ஓ’ கதை அப்படி போகுதா… லண்டனில் இருந்து ஸ்டாலின் கொடுத்த ‘அந்த’ ரகசிய அட்வைஸ்… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றிய ‘அந்த’ ஒரு மீட்டிங்…!

By Visaka on ஆடி 18, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. தேர்தலுக்கு முன்பு திமுக தலைமையில் வலுவாக இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பக்கம் சாய்ந்துள்ளதால், திமுக தற்போது தனித்து விடப்பட்ட சூழலில் உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், லண்டனில் இருந்து காணொளி காட்சி மூலம் திமுக நிர்வாகிகளுடனும், எம்பி-க்களுடனும் ஆலோசனை நடத்திய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரசுடன் நெருக்கம் காட்ட வேண்டாம் என்றும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களைக் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சரவையில் விரைவில் திமுக எம்பிக்கள் இடம்பெறப் போகிறார்கள் என்று பேசியிருந்ததும், விசிக தலைவர் திருமாவளவன் திமுக-பாஜக கூட்டணி அமையும் என்று கணித்துக் கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்ததால், தேசிய அளவில் ஒரு வலுவான ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜக-வுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க திமுக தலைமை விரும்புவதாகத் தெரிகிறது. மு.க.ஸ்டாலினின் இந்த திடீர் அட்வைஸ், “அப்போ திமுக – பாஜக கூட்டணி உறுதியா?” என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலமாக எழுப்பியுள்ளது.

   

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், கூட்டணி குறித்து திமுக இப்போதே அவசரப்படாமல் நிதானமாக காய்களை நகர்த்தி வருகிறது. இருப்பினும், வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட உள்ள மிக முக்கியமான ‘தொகுதி மறுவரையறை சீரமைப்பு மசோதா’ மீதான வாக்கெடுப்பு தான் இந்த கூட்டணியின் நிஜமான அச்சாரமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த வாக்கெடுப்பை திமுக புறக்கணித்தாலோ அல்லது மறைமுக ஆதரவு அளித்தாலோ, திமுக – பாஜக அதிகாரப்பூர்வமற்ற கூட்டணி உறுதியாகிவிடும் என்பதால், தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.