அடடா சூப்பர் சான்ஸ்… தேர்வு கிடையாது… +2 படித்தவர்களுக்கு அரசு வேலை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! முழு விவரம் உள்ளே…!!

By Swetha on ஆடி 18, 2026

Spread the love

சென்னை தெற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், குழந்தைகள் உதவி எண் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ளார். முற்றிலும் தற்காலிக அடிப்படையிலான இந்த ஆட்சேர்ப்பில், சிறப்பு ஜூவனைல் காவல் பிரிவு பணிக்கு ஒரு காலிப்பணியிடமும், அவுட்ரீச் ஊழியர் பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்களும் என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதியை பொறுத்தவரை, சிறப்பு ஜூவனைல் காவல் பிரிவிற்கு சமூகப் பணி அல்லது சமூக அறிவியல் துறையில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து, கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்; இதற்கு மாதச் சம்பளமாக ரூ.18,356 வழங்கப்படும். அவுட்ரீச் ஊழியர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நல்ல பேச்சுத்திறன் கொண்டிருக்க வேண்டும்; இதற்கு மாதச் சம்பளமாக ரூ.10,592 வழங்கப்படும். இரு பணிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

   

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் chennai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “District Child Protection Unit, Chennai South, No 1 First Floor Street, GCC Commercial Complex, Alandur, Chennai – 600016” என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியில் சேரும்போது காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழை (Police Verification Certificate) சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.