கனிமொழி – ராகுல் ரகசிய டீல்..? திமுக கோட்டையில் காங்கிரஸ் கொடி…? காங்கிரஸின் மெகா லிஸ்ட்டால் ஆடிப்போன அறிவாலயம்…!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி நேற்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நீண்ட கோரிக்கைப் பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, 39 முதல் 45 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வேண்டும் என்றும், கூடுதல் ராஜ்யசபா இடங்கள் மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியதாகத் தகவல்கள் கசிகின்றன.

அனைத்திற்கும் மேலாக, தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டால், ஆட்சியில் பங்கு (Power Sharing) அதாவது மந்திரி சபையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற ‘மெகா’ நிபந்தனையையும் காங்கிரஸ் முன்வைத்துள்ளதாம். இருப்பினும், திமுக தலைமை தற்போது வரை “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கைக்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருவதாகவும், தொகுதிகளின் எண்ணிக்கையைச் சற்று உயர்த்தித் தர மட்டும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.