ஆதாருக்கான உருவத்தை அறிமுகம் ஒன்றிய அரசு… இனி மக்களுக்கு ரொம்ப ஈஸி..!!

By Soundarya on தை 9, 2026

Spread the love

ஆம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2026-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி(நேற்று ) ஆதாருக்கான பிரத்யேக அடையாளச் சின்னத்தை (Mascot) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அதற்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சின்னத்திற்கு ‘உதய்’ (Udai) என்று பெயரிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அருண் கோகுல் என்பவர் இந்த உருவத்தை வடிவமைத்தார். ‘உதய்’ என்ற பெயரைப் பரிந்துரைத்த போபாலைச் சேர்ந்த ரியா ஜெயின் முதற்பரிசை வென்றார். ஆதார் புதுப்பித்தல் (Update), அங்கீகாரம் (Authentication) மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் போன்ற சிக்கலான விஷயங்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது