உஷார்..! வங்கிக்கணக்குகளுக்கு வலை விரிக்கும் கும்பல்.. “வெறும் ரூ.5,000-க்கு ஆசைப்பட்டு” வங்கிக்கணக்கை விற்ற நபர்… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!!

By Soundarya on தை 9, 2026

Spread the love

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நடைபெற்ற இந்த 15 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  மோசடியாளர்கள் தங்களை சிபிஐ (CBI) அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ஓய்வு பெற்ற அரசு ஊழியரை மிரட்டி 15 லட்சம் ரூபாயைப் பறித்துள்ளனர். இந்த மோசடிப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, புதுச்சேரியைச் சேர்ந்த ஹென்றி ஜோன்ஸ் என்பவர் சிக்கினார்.

விசாரணையில், அவர் வெறும் 5,000 ரூபாய் பணத்திற்காக தனது பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி, அதன் விவரங்களை மோசடி கும்பலிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைத் தற்போது கைது செய்துள்ளனர். மோசடி கும்பல்கள் இது போன்ற அப்பாவி நபர்களின் அல்லது பணத்திற்கு ஆசைப்படுபவர்களின் வங்கிக் கணக்குகளை (Mule Accounts) வாடகைக்கு எடுத்துப் பணத்தைப் பதுக்குகின்றனர்.

   
உங்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு அல்லது ஓடிபி (OTP) ஆகியவற்றை யாரிடமும் பகிராதீர்கள். உங்கள் கணக்கில் நடக்கும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். சைபர் புகார்களுக்கு Cyber Crime Portal என்ற இணையதளத்தையோ அல்லது 1930 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளவும்.