பணப்பெட்டி டாஸ்க்…! 7 லட்சம் ரூபாயுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on தை 7, 2026

Spread the love

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணப்பெட்டி டாஸ்க்கில் போட்டியாளர் சபரி 7 லட்சம் ரூபாயுடன் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரோரா ஏற்கனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், விக்ரம், சபரி, வினோத், சான்ட்ரா மற்றும் திவ்யா ஆகிய ஐந்து பேர் வெளியேற்றத்திற்கான பட்டியலில் இருந்தனர். இதில் தனக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் எனக் கருதிய சபரி, பணப்பெட்டியைத் தேர்வு செய்து புத்திசாலித்தனமாகப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த வாரத்தில் பாரு மற்றும் கமருதீன் ஆகிய இருவருக்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்ட நிலையில், சுபிக்ஷாவும் மக்களின் வாக்குகளால் வெளியேற்றப்பட்டார். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்னும் சில நாட்களில் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது. திவ்யா அல்லது கானா வினோத் ஆகிய இருவரில் ஒருவர் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகப் பேசப்படும் நிலையில், சபரியின் இந்த திடீர் வெளியேற்றம் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.