சென்னை காமராஜர் சாலையில் இன்று அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அங்கிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் மற்றொரு கார் மீது மோதியதில், பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர், விபத்து நடந்தவுடன் அங்கிருந்து தப்பியோடியதாகத் தெரிகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
