ரூ.100 கோடி நில மோசடி… “ஸ்கெட்ச் போட்ட சிபிசிஐடி… ‘நான் குற்றவாளியே இல்ல…’ ஜாமீன் மனுவில் கதறிய பிரமுகர்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

Spread the love

பழனி முருகன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான, சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் ரூ.2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அந்தப் பத்திரப்பதிவை ரத்து செய்ததுடன், சிபிசிஐடி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வெள்ளத்துரை, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில், சமீபத்தில் சொத்து ஒன்றை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.2 கோடி பணத்திற்கு வரி செலுத்துவதைத் தவிர்க்க, ஆடிட்டரின் அறிவுரைப்படி பழனி மலை அடிவாரத்தில் உள்ள நிலத்தை வாங்க முடிவு செய்ததாக வெள்ளத்துரை தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வ ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே நிலத்தை வாங்க முற்பட்டதாகவும், ஆரம்பத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவைப் பெற்றே நிலத்தைப் பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உழைத்துச் சேர்த்த பணத்தில் வாங்கிய இந்த நில விவகாரத்தில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தம்மைக் தேவையின்றிச் சிக்க வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்பு தனியாரிடம் விளக்கம் கேட்காமல் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தமக்கு முன்ஜாமீன் வழங்கிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கின் எதிர்மனுதாரராக சிபிசிஐடி காவல்துறையைச் சேர்த்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. பழனி கோவில் நில விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்து வரும் சூழலில், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிலவரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago