கார் முன் விளையாடிகொண்டிருந்த குழந்தை… போனில் பேசியபடி ஸ்டார்ட் செய்த ஓட்டுநர்.. அடுத்து நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவின் பீட்டா-2 காவல் எல்லைக்குட்பட்ட செக்டார் சாய்-3 பகுதியில் ஒரு நெஞ்சை பதறவைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள சாலையில் சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பிக்-அப் லாரியின் ஓட்டுநருக்கு அலைபேசி அழைப்பு வந்துள்ளது. அலைபேசியில் பேசியபடியே கவனக்குறைவாக இருந்த ஓட்டுநர், வாகனத்திற்கு முன்னால் குழந்தை விளையாடுவதைக் கவனிக்காமல் திடீரென லாரியை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டியுள்ளார். இதில் அந்தப் பிஞ்சு குழந்தை லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி நசுங்கியது.

இந்தக் கொடூரமான விபத்து அங்கிருந்த சிசிடிவி  கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்போரை உறைய வைக்கும் இந்த விபத்தில், அந்தச் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான். தற்போது அந்தக் குழந்தை எவ்வித காயமுமின்றி முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டுநரின் இந்த அஜாக்கிரதைக்கு எதிராகப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.