திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சேர்ந்த சாமிநாதன் செண்பகவல்லி மகள் பவானி திருமணமான ஆறு மாதத்தில் விவாகரத்து ஆன பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இரண்டாவது மகள் ஜீவாவிற்கு பார்வை குறைபாடு உள்ளது. பார்வை குறைபாடு, விவாகரத்து ஆன மகள் மற்றும் இரண்டு பெண்களும் மனவளர்ச்சி குன்றியவர்கள் என என கூறப்படுகிறது.
சாமிநாதனுக்கு வயது மூப்பு காரணமாக தனக்குப் பிறகு பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார். 40 வயதுக்கு மேலாகியும் இரண்டு மகள்களுக்கு திருமணமாகாததால் தம்பதி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் எழுதிய தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதமும் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவர்கள் நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம் என கூறபடுகிறது.
