தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல வியூகங்களை வகுத்து வருகின்றது. என்னதான் தனது கூட்டணி பலமாக இருந்தாலும் கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாகவே தொகுதி பங்கீடு தொடர்பாக முரண்பாடு நிலவி வருகிறது. காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் இடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களிடம் ஸ்டாலின் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் திமுகவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அவர் வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மதிமுக இருக்கும் நிலையில் நீங்கள் எப்படி செல்ல முடியும் என கேட்டதற்கு சிபிஐ, சிபிஎம் ஒரே கூட்டணியில் இல்லையா? அதேபோல தான் இது என சத்யா விளக்கமளித்துள்ளார். அதே வேளையில் சத்யாவை சேர்த்தால் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும் என திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
