சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் விலங்குகளின் ஆக்ரோஷமான சண்டைகளும், மனிதர்களை அவை தாக்கும் வீடியோக்களுமே அதிகம் வைரலாகும். ஆனால், அவற்றுக்கு மத்தியில் மனிதநேயத்தின் உன்னதத்தை உணர்த்தும் ஒரு வீடியோ தற்போது மக்களின் இதயங்களை வென்றுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண்மணி தன்னிடம் இருக்கும் சுடச்சுட ரொட்டிகளைப் பசியோடு இருக்கும் குரங்குகளுக்குத் தன் கையாலேயே அன்புடன் ஊட்டி விடுகிறார்.
यही हमारी खूबसूरत भारतीय सभ्यता है..।।
महिला केवल बंदरों को गर्म रोटियाँ बनाकर नहीं दे रही हैं; बल्कि उन्हें ठंडा करने के लिए उनमें हवा भी फूँक रही हैं ताकि बंदरों की जीभ न जल जाए।
बंदरों को भी संतुष्टि है कि उन्हें रोटियां मिल जाएंगी इसलिए वो छीना झपटी नहीं कर रहे बल्कि अपनी… pic.twitter.com/EVlyY8zjzM
— Dr. Sheetal yadav (@Sheetal2242) December 16, 2025
“இந்தியாவின் உண்மையான அழகு இதுதான்” என நெட்டிசன்களால் போற்றப்படும் இந்த வீடியோ, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத அன்பையும், மனிதாபிமான பிணைப்பையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது. இந்த நெகிழ்ச்சியான காட்சி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
