நாள் முழுவதும் வேலை செய்துவிட்டுச் சோர்வுடன் வீட்டிற்குத் திரும்பிய கணவன், சமையல் செய்யப்படாததைக்கண்டு ஆத்திரமடைந்து மனைவியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் மனைவியோ வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து அமைதியாகக் கண்ணீர் வடித்துள்ளார். சமையல் செய்யாததற்கான காரணத்தைக் கணவன் கோபமாகக் கேட்டபோது, தனக்கு உடம்பு சரியில்லாததால் உறங்கிவிட்டதாகவும், அதனால் தான் உணவு தயாரிக்க முடியவில்லை என்றும் அந்தப் பெண் மிகவும் அமைதியாகக் கூறியுள்ளார்.
தன் கணவன் அடித்த பிறகும் மனைவி கோபப்படாமல் அமைதி காத்ததைக் கண்டு வியந்த கணவன், “ஏன் எதிர்த்துப் பேசவில்லை?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண், “கணவன் கோபப்படும்போது எதிர்த்துப் பேசக் கூடாது என்பதே என் பெற்றோரின் வளர்ப்பு” என்று பதித்துள்ளார். குடும்ப உறவுகள் நீடித்து நிற்க வேண்டுமானால், இருவருமே ஒருவரின் சூழ்நிலையையும் உணர்வுகளையும் மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் இக்கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
