கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று துமகூருவில் இருந்து மதுகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்து வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பயணி ஒருவருக்குத் திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.
அந்த பயணி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு துடித்ததைக் கண்ட சக பயணிகளும், பேருந்து ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட KSRTC பேருந்து ஓட்டுநர், சிறிதும் தாமதிக்காமல் பேருந்தை உடனடியாக அருகில் இருந்த சாச்சி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நோக்கியத் திருப்பி, நேராக மருத்துவமனை நுழைவாயிலிலேயே கொண்டு போய் நிறுத்தினார்.
ஓட்டுநரின் இந்தச் சாதுர்யமான மற்றும் மனிதநேயமிக்க செயலால், அந்தப் பயணி உடனடியாக மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். சொந்தப் பொறுப்பையும் பயண நேரத்தையும் கடந்து, ஒரு மனித உயிரைக் காப்பாற்றத் துரிதமாகச் செயல்பட்ட அந்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு இணையத்திலும் சமூகத்திலும் பாராட்டுகள் பெருமளவில் குவிந்து வருகின்றன.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…